india

img

50 ஆண்டுக்கு முன்பு பணமோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு... மெகபூபா முப்தி தாயாருக்கு அமலாக்கத்துறை சம்மன்....

ஜம்மு:
மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரும், காஷ்மீர் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தியின் தாயார் குல்ஷன் நாஷிருக்கு, அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

1970-ஆம் ஆண்டு நடந்த பண மோசடியில் குல்ஷன் நாஷிருக்குத் தொடர்பு இருப்பதாக கூறி, அவரை ஜூலை 14 அன்று விசாரணைக்கு ஆஜராகச் சொல்லிஅமலாக்கத்துறை சம்மனை அனுப்பி வைத்துள்ளது.அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைக்கு மெகபூபா முப்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.“ஒன்றிய அரசின் தொகுதிகளை மறுசீரமைக்கும் கமிட்டியை புறக்கணிக்க முடிவு செய்த நாளில் எனது தாயாருக்கு சம்மன் வந்துள்ளது ஆச்சரியமாக இருக்கிறது” என்றுகூறியுள்ளார். மேலும், “அறியப்படாத குற்றச்சாட்டுகளுக்கு நேரில் ஆஜராகுமாறு, என் தாயாருக்கு அமலாக்கத்துறை ஒரு சம்மன் அனுப்பியுள்ளது. அரசியல் எதிரிகளை அச்சுறுத்துவதற்கான முயற்சிகளில், பாஜக அரசு மூத்த குடிமக்களைக் கூட விட்டு வைக்கவில்லை” என்றும் தனது டுவிட்டர்பக்கத்தில் மெகபூபா பதிவிட்டுள்ளார்.

;